Kudarnina Menbu Thirupugal 48 – குடர்நிண மென்பு திருப்புகழ்
திருப்புகழ் எண்: 48
திருப்புகழ் ஆலயம்: திருச்செந்தூர்
வேலும் மயிலும் துணை
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த …… தானாந்தனனா
பாடல் வரிகள் ஆரம்பம்
குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு …… சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து …… நாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள் …… தோடோய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து …… நீயாண் டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கை …… வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு …… பார்சூழ்ந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை …… வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற …… சூராந் தகனே.
……பாடல் முடிவடைகிறது……



